search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கொறடா"

    தமிழக சட்டசபை இன்று தொடங்கும் முன் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #TNAssembly #Rajendran #Dhanapal
    சென்னை:

    பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கிறார். இதையடுத்து இன்று சட்டசபை தொடங்கும் முன் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


    தற்போது அ.தி.மு.க.வின் பலம் 115-ல் இருந்து 114 ஆக குறைந்தது. என்றாலும் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மெஜாரிட்டி பலம் உள்ளது. இதுதொடர்பாகவே இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    கோர்ட்டு தீர்ப்பு பற்றி சட்டசபை செயலாளரிடம் கேட்டபோது, எங்களுக்கு இன்னும் தீர்ப்பு நகல் வரவில்லை. தீர்ப்பு நகல் கிடைத்ததும் எம்.எல்.ஏ. பதவி காலியானது பற்றி முறைப்படி அறிவிக்கப்படும் என்றார். #TNAssembly #Rajendran #Dhanapal

    டிடிவி தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். #ADMK
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அதிமுக எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டிடிவி தினகரனை ஆதரித்த 18 எம்எல்ஏ-க்களும் பதவியை இழந்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து கொண்டே அதிமுக அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.



    இதனால் அவர்கள் பதவியை பறிக்க அதிமுக மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அந்த மூன்று எம்எல்ஏ-க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அதிமுக தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்எல்ஏ-க்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 எம்எல்ஏ-க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் 3 எம்எல்ஏ- க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் ‘‘கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    ×